News January 19, 2026
₹200 கட்டினால் போதும் ₹75,000 கிடைக்கும்

மத்திய அரசின் ஜனஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு வெறும் ₹200 பிரீமியமாக கட்டினால், ₹75,000 வரை காப்பீடு கிடைக்கும். காப்பீடுதாரர் இயற்கை மரணமடைந்தால் ₹30,000, விபத்து காரணமாக உயிரிழந்தால் ₹75,000, Partial disability என்றால் ₹37,500, Fully disabled என்றால் ₹75,000 கிடைக்கும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. முழு விவரங்களை அறிய LIC-ஐ அனுகவும். SHARE.
Similar News
News January 31, 2026
கிருஷ்ணகிரி: மது பழக்கத்தால் பறிபோன உயிர்!

நல்லூர் அடுத்த பெரிய எலசகிரியை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் (45). இவருக்கு தொடர் மதுபழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) மாலை வந்த வெங்கடேஷை அவரது மகன் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
பெரும் கஷ்டத்தை போக்கும் அற்புத மூலிகை

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤பெருங்காயப் பொடியை வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி குறையும் ➤பெருங்காயப் பொடியை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் பிரச்னை தீரும் ➤தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News January 31, 2026
குப்பை வண்டியில் உணவா..: அண்ணாமலை

தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது அதை வழங்காமல், உணவு வழங்குவதாக கூறி CM ஸ்டாலின் விளம்பர நாடகம் நடத்தினார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர்களை அவமானப்படுத்தும் விதமாக குப்பை வண்டியில் உணவு கொடுக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த தரமற்ற உணவைக் கூட வெகுநேரம் காக்க வைத்தே திமுக அரசு வழங்குகிறது என்றார். மேலும், தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை CM காயப்படுத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.


