News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹18,000.. தமிழக அரசு HAPPY NEWS

தீபாவளியையொட்டி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு, நகர கூட்டுறவு, ஊரக வளர்ச்சி வங்கிகளின் பணியாளர்களுக்கு தலா ₹18,000 வழங்கப்படும். மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தலா ₹24,000 வழங்கப்படும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு தலா ₹30,000 கிடைக்கும்.
Similar News
News October 11, 2025
தூங்கும் உலகில் தூங்காத நகரங்கள் PHOTOS

உலகின் பல நாடுகளில் இரவில் ஜொலிக்கும் தூங்கா நகரங்கள் உள்ளன. உணவகம், போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்தும் இரவில் இயங்கும். வேலைவாய்ப்பு, சுற்றுலா, நவீன வாழ்க்கைமுறை ஆகியவையே தூங்கா நகரங்களின் முக்கிய காரணிகளாக இருந்து வருகின்றன. மேலே, சில பிரபல நகரங்களின் பட்டியலை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த நகரம் எது?
News October 11, 2025
175 ரன்னில் அவுட்… ஜெய்ஸ்வால் சொன்னது என்ன?

வெ.இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்னில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அதுபற்றி பேசிய அவர், இது ஆட்டத்தின் ஒரு பகுதியே. நான் எப்போதுமே நீண்ட இன்னிங்ஸ் ஆடி ஆட்டத்தை நீட்டிக்கவே விரும்புகிறேன் என்றார். பந்து நன்றாக வரும்போது நீண்ட நேரம் கிரீஸில் நின்று ரன்களை குவிக்க முடியும் என்ற அவர், இன்னும் பிட்ச் பேட்டிங்குக்கு தான் சாதகமாக உள்ளது. ஆனாலும், நம் பவுலர்கள் கலக்கலாக பந்துவீசுகின்றனர் என்றார்.
News October 11, 2025
மெட்டி ஒலியின் ரகசியம் தெரிந்துகொள்ளுங்கள்

*அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அணியும் மெட்டியை வெள்ளியில் அணிவதே சிறந்தது.
*மெட்டி உடைந்தால் உடனடியாக மாற்ற வேண்டும். உடைந்த மெட்டியை அணியக்கூடாது.
*மெட்டியை மங்களகரமான திருவிழா நாள்களில் மாற்றலாம்.
*மெட்டியை மாற்ற நினைத்தால், மதியம் 12 மணிக்கு முன்பாகவே மாற்ற வேண்டும்.
*ஜோதிடத்தின்படி 2 மெட்டி மட்டுமே அணிய வேண்டும். ஆனால், ஒற்றைப்படையாக 3 மெட்டிகளை பெண்கள் பெரும்பாலும் அணிகின்றனர்.