News January 24, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். SHARE IT.
Similar News
News February 12, 2026
TTV-க்கு எதிராக திரும்பியுள்ளாரா சசிகலா?

விரைவில் புதிய கட்சி தொடங்கி, தவெக கூட்டணியில் சசிகலா இணையவிருப்பதாக பேசப்படுகிறது. இது தொடர்பாக சசிகலாவின் தம்பி திவாகரனும், விஜயை சந்தித்து பேசியுள்ளாராம். அத்துடன் அமமுகவை உடைக்க சசிகலா பிளான் போட்டிருக்கிறார் என்கின்றனர். இதற்காக அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்நிலையில், சசிகலா கட்சியில் இணைய பலர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
News February 12, 2026
தங்கம் விலையில் நிகழ்ந்த திடீர் மாற்றம்

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக மந்தநிலையில் இருந்து வந்த தங்கம் நேற்று மாலை திடீரென ஏற்றம் கண்டது. அதன் தாக்கத்தாலேயே இந்திய சந்தையில் நேற்று மாலை <<19112680>>சவரனுக்கு ₹1,520 உயர்ந்தது<<>>. இந்நிலையில், இன்று(பிப்.12) ஏறுமுகத்திலேயே தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $44 டாலர்கள் உயர்ந்து $5,060-ஐ கடந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்றும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
News February 12, 2026
காலையில் இவற்றை செய்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஹார்மோன் ரிதம் காரணமாக இயற்கையாக இரவு நேரத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமாம். ஆகவே, காலையில் கவனமாக இருப்பது அவசியம். நாள் முழுக்க ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, டாக்டர்கள் சில டிப்ஸ்களை வழங்குகின்றனர். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


