News February 4, 2026

₹18,000 சம்பளம்.. 22,000 காலிபணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT.

Similar News

News February 7, 2026

இன்று ஓலா, ஊபர் ஸ்டிரைக்

image

நிலையற்ற ஊதியம் & விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து Uber, Ola, Rapido உள்ளிட்ட தளங்களின் டிரைவர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2025-ம் ஆண்டே மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்திருந்தாலும், தளங்கள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. எனவே, இன்று பஸ் உள்ளிட்ட இதர போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துங்க மக்களே.

News February 7, 2026

தீபம் காட்டும் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?

image

கற்பூர ஆரத்தி செய்த பிறகுதான், பூஜை பூர்த்தியானதாக கருதப்படுகிறது. கற்பூரம் எரியும்போது காற்றில் மறைந்துவிடுவதை போல, நமது ஆன்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து ஒன்றுபட வேண்டும் என்ற தத்துவத்தை கற்பூரம் விளக்குகிறது. தீபாராதனையின் போது தீபம் அணைந்துவிட்டால் அபசகுணம் என்று எண்ண வேண்டாம். அதே கற்பூரத்தை மீண்டும் ஏற்றாமல், உடனே வேறு கற்பூர துண்டுகளை வைத்து எரித்து தீபாராதனை காட்டலாம்.

News February 7, 2026

நான் பேசியது புரியலையா? கமல் ரியாக்‌ஷன்

image

<<19050083>>நாடாளுமன்றத்தில் கமல்<<>> பேசியது புரியவில்லை என பாஜக வைத்த குற்றச்சாட்டுக்கு, அவர் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு தமிழனாக நல்ல கருத்தை பேசிவிட்டதாக தான் நம்புவதாகவும், அதை மறுப்பவர்கள் விவாதம் நடத்தட்டும் எனவும் கூறினார். மேலும் நல்ல கருத்துகள் விவாதத்திற்குள்ளாக வேண்டும் என்ற அவர், விவாதம் நடத்தினால் உண்மையை புரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!