News August 10, 2024
பெங்களூருவுக்கு ₹16,000… சென்னைக்கு ₹0…

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மாநில வாரியாக மத்திய அரசு அளித்த நிதி குறித்த விவரம்: *குஜராத்: அகமதாபாத் ₹6,400 & சூரத் ₹4,700 கோடி (2 கட்டங்களுக்கு) *உ.பி: 4 திட்டங்களுக்கு ₹8,000 கோடி *டெல்லி: இயங்கிவரும் கட்டுமானத்திற்கு ₹11,000 கோடி *பெங்களூரு: செயல்படும் திட்டத்திற்கு ₹16,000 கோடி *மும்பை: 3வது கட்டத்திட்டத்திற்கு ₹12,500 கோடி. ₹63,246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத் திட்டத்திற்கு ₹0.
Similar News
News August 24, 2025
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு இவ்வளவா?

பணக்கார முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர CM <<17501452>>சந்திரபாபு <<>>நாயுடு முதலிடத்திலும், மேற்குவங்க CM மம்தா பானர்ஜி வெறும் ₹15.4 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்திலும் இருக்கின்றனர். இதற்கிடையில் CM ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்து அறிய பலரும் ஆர்வம் காட்டினர். ஸ்டாலின் ₹8 கோடி சொத்து மதிப்புடன் 14-வது இடத்தில் இருக்கிறார். நாட்டின் மொத்தமுள்ள 31 CMகளின் சொத்து மதிப்பு சுமார் ₹1,630 கோடி.
News August 24, 2025
எல்.முருகன் மீது அதிருப்தியில் அமித்ஷா.. பின்னணி என்ன?

நெல்லையில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டை அடுத்து, எல்.முருகன் மீது அமித்ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டு மேடையில் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் 10 பேரை பாஜகவில் இணைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாராம் முருகன். ஆனால், Ex திமுக பிரமுகர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மட்டுமே பாஜகவில் இணைந்தார். இதனால் அமித்ஷா கடும் அப்செட்டில் இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News August 24, 2025
இந்திய கிரிக்கெட் அணியும்.. ஜெர்சி ஸ்பான்சர்களும்!

*SAHARA: திவாலானதை தொடர்ந்து, 2012-ல் ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்பட்டது.
*ஸ்டார்: நிதி அழுத்தத்தின் காரணமாக, உரிமத்தை இழந்து வெளியேறியது.
*OPPO: இந்தியா- சீனா அரசுகளுக்கிடையேயான பதட்டமான சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டது.
*Byjus: நிதி இழப்புகளின் காரணமாக, ஸ்பான்சர்ஷிப் நிறுத்தப்பட்டது.
*Dream11: ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் & ஒழுங்குபடுத்துதல் மசோதா 2025, தடை செய்யப்பட்டுள்ளது.