News September 6, 2025
ஜெர்மனி பயணத்தால் ₹15,516 கோடி முதலீடு: CM ஸ்டாலின்

தமிழ்நாட்டில் EV உற்பத்திக்காக UK-வின் ஹிந்துஜா குழுமம் ₹7,500 கோடி முதலீடு செய்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம், 1000-க்கும் மேற்பட்டவருக்கு வேலை கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், UK & ஜெர்மனி பயணத்தால் மொத்தம் ₹15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 21, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் பல மடங்கு சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $108 (₹10,157) குறைந்து $4,494-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $68-ஆக உள்ளது. சென்னையில், தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹400 உயர்ந்த நிலையில் இன்று குறைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
News March 21, 2026
8 தொகுதிகளில் உறுதியாக உள்ள விசிக

விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்க, திமுக 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதை விசிக ஏற்க மறுப்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. CM ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து TN-ல் 8-ம், புதுவையில் 2 தொகுதிகளும் கேட்டதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் அதற்கு மறுப்பு தெரிவிக்க, 8 தொகுதிகளுக்கு கீழ் குறைக்க வேண்டாம் என திருமாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனராம்.
News March 21, 2026
புதுச்சேரி தேர்தலுக்கு தயாரான விஜய்

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என நினைத்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் 30 தொகுதிகளில் தவெக தனித்து களம் காண உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட உள்ளார். இவர்களும் அனைவரும் வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தொடர்ந்து அடுத்த வாரம் புதுச்சேரியில் விஜய் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.


