News February 6, 2026
₹1,500 உரிமைத் தொகை கட்.. அமைச்சர் எச்சரிக்கை

மத்திய பிரதேசத்தில் Ladli Behna Yojana திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ₹1,500 தரப்படுகிறது. இந்நிலையில், வருவாய் துறை அமைச்சர் கரன் சிங் வர்மா பங்கேற்ற விழாவிற்கு, சொற்ப அளவில் பெண்கள் வந்திருந்தனர். இதனால் கோபமடைந்த அவர், அடுத்தமுறை அரசின் நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் வரத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து Ladli Behna Yojana திட்டத்தில் இருந்து பெயர்களை நீக்க உத்தரவிடுவேன் என எச்சரித்தார்.
Similar News
News February 20, 2026
ஆண்களுக்கு சக்தி கொடுக்கும் புளிச்ச கீரை!

புளிப்பு சுவை கொண்டதால் பலரும் புளிச்ச கீரையின் பக்கம் செல்வது இல்லை. ஆனால் அதில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதனை தவிர கண் பார்வையை மேம்படுத்த, எடையை குறைக்க, எலும்புகளை வலுப்படுத்த, ரத்த சோகையை சரி செய்ய இந்த கீரை முக்கிய பங்காற்றுகிறதாம். அதைவிட ஆண்மை குறைபாடுள்ளவர்களுக்கு புளிச்ச கீரை ரொம்பவே நல்லதாம். Share it
News February 20, 2026
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதேபோல் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News February 20, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 20, மாசி 8 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை:7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


