News August 5, 2024
₹15 லட்சம் கோடி சரிவை சந்தித்த பங்குச்சந்தை

அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக, ஆசிய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால், இந்திய பங்குச்சந்தையில் இன்று ₹15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் 20%, தென்கொரியா, தைவான் தலா 8% இழந்துள்ளன. சென்செக்ஸ் 2,200 புள்ளிகளும், நிஃப்டி 800 புள்ளிகளும் சரிவை சந்தித்துள்ளன. டாலருக்கு நிகரான ரூபாயின்
மதிப்பும் 83.78 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
Similar News
News March 19, 2026
தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள்.. நாதக தேர்தல் வாக்குறுதி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை சீமான் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், *சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 தலைநகரங்கள். *வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை. *ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம். *3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லோக்சபா தொகுதி. *சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைப்பு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
News March 19, 2026
தவெகவுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது? கேட்டார் ஸ்டாலின்

விருப்பமனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அப்போது, பெரும்பாலானோரிடம் உங்கள் தொகுதியில் தவெகவுக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்று ஸ்டாலின் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனைப் பொறுத்து இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
News March 19, 2026
கூட்டணி முடிவை மீண்டும் மாற்றிய ரங்கசாமி!

NDA-வில் அதிருப்தியிலிருந்த NR காங்கிரஸ், தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் விஜய் உடன் கூட்டணி அமைப்போம் என நேற்று முன்தினம் கூறியிருந்தது. மேலும், 2 நாள்களாக NR காங்கிரஸ் – பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்தனர். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிய ரங்கசாமி, இன்று காலை முதல் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


