News August 8, 2025
₹130 கோடி செலவு செய்தும் வீண்… சோகத்தில் ரசிகர்கள்

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி, கேரள சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டது. இதனால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா? நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கேரள அரசின் வணிக பார்ட்னரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டர் நிறுவனம், அர்ஜென்டீனா கால்பந்து கூட்டமைப்புக்கு (AFA) ₹130 கோடி கொடுத்துள்ளதாம். அப்படியும், எங்களால் இந்த ஆண்டு வரமுடியாது, வேண்டுமானால் அடுத்த ஆண்டு பாக்கலாம் என AFA கூறியுள்ளதாம். So sad!
Similar News
News August 9, 2025
ராசி பலன்கள் (09.08.2025)

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – வெற்றி ➤ கன்னி – நலம் ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – அச்சம் ➤ தனுசு – மறதி ➤ மகரம் – பணிவு ➤ கும்பம் – அசதி ➤ மீனம் – கவலை.
News August 9, 2025
நீதிக்கும், அறத்துக்கும் கிடைத்த வெற்றி: அன்புமணி

அன்புமணி தரப்பில் நாளை நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த HC, அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதுபற்றி X பக்கத்தில் கருத்து வெளியிட்ட அன்புமணி, இது நீதிக்கும், அறத்துக்கும் கிடைத்த வெற்றி. பாமக வளர்ச்சிப்பணிகள் குறித்து நாளைய பொதுக்கூட்டத்தில் முடிவெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.
News August 8, 2025
பேசுவதை மட்டும் நிறுத்தாதீங்க

தம்பதியர் தங்களுக்குள் பேச்சுவார்த்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். இல்லையெனில், சிறு பிளவும் பெரிய பிரச்னைக்கு காரணமாகிவிடும். சிறிது அமைதியாக இருக்கலாம், பின் உடனே பேசிவிடுங்கள். துணைவர்மீது கோபம், அதிருப்தி மனதைப் பிசைந்து கொண்டிருந்தாலோ, அலுவலகப் பிரச்னையாக இருந்தாலோ, மனதில் இருப்பதை அவரிடம் பகிருங்கள். அவரையும் உங்கள் பிரச்னையில் உதவி செய்ய வையுங்கள்.