News November 30, 2024
அரசு வழக்கறிஞர்களால் ₹1,100 கோடி இழப்பா?

மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளிய வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது அரசு தரப்பில் தமிழக பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட யாரும் ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை வழக்குகளில் ₹1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
Similar News
News August 21, 2025
கர்நாடகாவை போல் TN அரசு செயல்படவில்லை: அன்புமணி

சமூகநீதியை CM ஸ்டாலின் குழித்தோண்டி புதைப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 183 நாள்களில் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசு காட்டிய வேகத்தை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் TN அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் காட்டவில்லை என அன்புமணி குற்றம்சுமத்தியுள்ளார்.
News August 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 21, 2025
இதை செய்தால் வீட்டிற்குள் கொசு நுழையாது

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொசுக்களும் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதால் அவற்றை விரட்ட மக்கள் பல முயற்சிகளை கையாளுகின்றனர். கொசுவை விரட்ட, 5-10 பூண்டை நீரில் ஊறவைத்து அந்த நீரை வீடு முழுவதும் தெளித்தால், அந்த வாடைக்கு வீட்டிற்குள் கொசு வாராது எனக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் சூடம் கொளுத்துவதன் மூலமும் கொசு வரவிடாமல் தடுக்கலாம்.