News January 19, 2025

10 ஆண்டுகளில் ₹11 லட்சம் கோடி: அண்ணாமலை

image

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக திட்டமிட்டே மறைப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு ₹11 லட்சம் கோடி வழங்கியுள்ளதாகவும், அதற்கான 36 பக்க வெள்ளை அறிக்கையைப் பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். பிப்.1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் பெரிய திட்டங்கள் வரும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News March 5, 2026

CM பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவிப்பு

image

நிதிஷ்குமார் பிஹார் CM பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு MP ஆக ஆசை இருந்ததாக கூறிய அவர், அதற்காகவே தற்போது CM பதவியை விடுத்து ராஜ்யசபா MP-ஆக போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதிய ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பரில் 10-வது முறையாக CM ஆன இவர் இப்படி அறிவித்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

News March 5, 2026

சங்கீதா விவாகரத்து.. வீடியோ ஆதாரம் உள்ளதாக தகவல்

image

விவாகரத்து வழக்கு தொடர்பாக, சங்கீதாவிடம் சில வீடியோ ஆதாரங்கள் உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவற்றையெல்லாம் வெளியிட்டு சங்கீதா பிரஸ் மீட் நடத்தவிருந்ததாகவும், அதை விஜய் தரப்பு தடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வழக்கில் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் என சங்கீதா தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

News March 5, 2026

ஜெயக்குமார் தவெகவுக்கு வரலாம்: செங்கோட்டையன்

image

Ex அமைச்சர் ஜெயக்குமாருக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கிடைக்காது என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் தவெகவுக்கு ஜெயக்குமார் வரலாம் என ஆஃபர் கொடுத்த அவர், தவெகவுக்கு சென்றுவிடுவேன் என திமுகவை மிரட்டி தான் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வாங்கியுள்ளதாகவும் பேசியுள்ளார். இதனால் ஜெயக்குமார், செங்கோட்டையனின் ஆஃபரை ஏற்பாரா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!