News March 11, 2025

ஒரே நாளில் ₹11.33 லட்சம் கோடி லாஸ்.. மஸ்கிற்கு கெட்ட காலம்

image

அமெரிக்க பங்கு சந்தை நேற்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததால், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், ஒரே நாளில் ₹11.33 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்தது. அரசு நிர்வாகத்துடன் தொழிலையும் மேற்கொள்வது கடுமையான சவாலாக உள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் DOGE தலைவராக உள்ள அவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், X, xAI நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

Similar News

News July 9, 2025

வீட்டை காலி செய்ய வந்த அதிகாரி.. இறந்து கிடந்த நடிகை

image

பாக்., <<17004189>>நடிகை Humaira Asghar <<>>மரணம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டுக்கு ஓராண்டாக பணம் கொடுக்காததால் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, நடிகையை வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் வந்தபோது துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் சடலமாக கிடந்தார். 15 நாளுக்கு முன்பு இறந்தது தெரிய வந்தது.

News July 9, 2025

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ திடீர் ராஜினாமா

image

புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நேரு. அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் வழங்கியுள்ளார்.

News July 9, 2025

எமோஜி அனுப்பினால் உறவுகள் மேம்படுகிறதா?

image

நவீன யுகத்தில் நேரடி உரையாடலை விட சமூக வலைதள சாட்டிங்தான் அதிகம். அந்தவகையில் ஒருவருடனான உரையாடலில் எமோஜிக்களை அடிக்கடி பயன்படுத்தும்போது உறவுகள் மேம்படுவதாகவும், நெருக்கம் வலுப்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணர்ச்சிகளின் சரியான வெளிப்பாடாக எமோஜி உள்ளதால் எதிர் நபரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் கண்டறிந்துள்ளார். உங்களுக்கு எமோஜி பிடிக்குமா? ?

error: Content is protected !!