News May 2, 2024
புற்றுநோய் பாதித்த நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. 46 வயதான செங் சேபன், கடந்த 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். பவர்பால் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் அவருக்கு இந்திய மதிப்பில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதில் வரிப் பிடித்தம் போக அவருக்கு ₹3,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 17, 2026
அதிமுகவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள்: OPS

திமுகவில் இணைந்த OPS-ஐ <<19327982>>RB உதயகுமார் <<>>கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், EPS குறித்து பேசக்கூடாது என தனக்கு எச்சரிக்கை விடுக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என OPS கேள்வி எழுப்பியுள்ளார். EPS-ம், உதயகுமாரும் சேர்ந்து அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டதாகவும், அக்கட்சியை அழித்த வரலாற்று பெருமை இருவரையுமே சாரும் எனவும் சாடியுள்ளார்.
News March 17, 2026
விடுமுறை.. காலையிலேயே மகிழ்ச்சியான அறிவிப்பு

தமிழகத்தில் வாக்குப்பதிவு(ஏப்.23) நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ECI அறிவித்துள்ளது. வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாது ஓட்டுப்போட வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
News March 17, 2026
ரஜினிக்கு மனவலிமை இல்லையா? அண்ணாமலை

ரஜினியின் அரசியல் குறித்து <<19363014>>ஆதவ் அர்ஜூனா<<>> பேசியதை அண்ணாமலை கண்டித்துள்ளார். ரஜினியின் மனவலிமை குறித்து, மாமனாரின் பணத்தை வைத்து பல கட்சிகள் மாறி அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதை, illusion (மாயை) என்று கூறலாம் என அண்ணாமலை சாடியுள்ளார். அனைத்து பிரச்னைகளையும் கடந்து ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல எனவும் கூறியுள்ளார்.


