News December 5, 2024

ரேஷன் அட்டைக்கு ₹10,000 வேண்டும்: பிரேமலதா

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹10,000 நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், 50% பாதிப்புகள் தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனவே முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ₹1 லட்சம் வழங்கத் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 14, 2025

Google Maps-க்கு சவால் விடும் ‘MapmyIndia’

image

‘அரட்டை App’ உலகளவில் கவனிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல தற்போது ‘MapmyIndia’ என்ற App-க்கும் வரவேற்பு கூடியுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வின் பதிவை தொடர்ந்து, இந்தியர்களின் கவனத்தை பெற்ற இந்த App, 3.5 கோடி டவுன்லோட்களை பெற்றுள்ளது. 1995-ல் ராகேஷ் & ரஷ்மி வர்மா என்ற இந்தியர்கள் உருவாக்கிய இந்த App-ல் துல்லியமான Map-களும், மேடுகள் பள்ளங்கள் குறித்து எச்சரிக்கைகளும் இடம் பெற்றுள்ளன.

News October 14, 2025

தரைமட்டமான வீடுகள்.. தவிக்கும் பாலஸ்தீனியர்கள்

image

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் பாலஸ்தீனியர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம் என்பதை மேற்காணும் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. தெற்கு காஸா பகுதியில் 90% வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. சொந்த இடங்களுக்கு பாலஸ்தீனியர்கள் திரும்பினாலும் தங்குவதற்கு வீடுகள் இன்றி தவிக்கின்றனர். SWIPE செய்து புகைப்படங்களை பார்க்கவும்.

News October 14, 2025

பிஹாரில் காங்கிரஸ் சுருங்கியது எப்படி?

image

பிஹாரை நீண்டகாலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்து 35 வருடங்கள் ஆகின்றன. சோசலிஸ்ட் RM லோஹியா தலைமையிலான ஓபிசி எழுச்சியில், 67-ல் முதல்முறையாக காங்., ஆட்சியை இழந்தது. ஓபிசி, முஸ்லிம், தலித் என காங்., வாக்குவங்கியை வசப்படுத்திய லாலு காங்கிரஸை வீழ்த்தி 90-களில் அரியணை ஏறினார். அதன்பின், கோஷ்டி பூசல், டெல்லி தலையீடு போன்றவை காங்.,கை RJD, JD(U), BJP கட்சிகளுக்கு அடுத்த இடத்துக்கு தள்ளியுள்ளன.

error: Content is protected !!