News May 7, 2025

₹10,000 பெட்டு: 5 பாட்டில் குடித்தவருக்கு நேர்ந்த அவலம்!

image

தொடர்ந்து 5 பாட்டில் மதுவை குடித்தால், ₹10,000 கொடுக்கிறோம் என நண்பர்களுக்குள் கட்டிய பந்தயத்தால், ஒரு உயிர் பறிபோயுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த கார்த்திக் (21), மது அருந்திய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 8 நாள்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 22, 2025

மூலிகை: தோல் நோய்களுக்கு குப்பைமேனி போதும்

image

➤சிறு செடியாக இருந்தாலும், குப்பைமேனி அனைத்து சரும பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
➤குப்பை மேனி இலையின் சாற்றை சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து, சொறி- சிரங்கு பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவலாம்.
➤குப்பைமேனி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெய் & மஞ்சள் தூள் சேர்த்து, சூடாக்கி, பிறகு ஆரவைத்து சருமத்தின் மீது தடவினால் சிறு சிறு காயங்கள் மற்றும் வெட்டுகளும் மறையும். SHARE IT.

News August 22, 2025

FLASH: மீண்டும் சரிவைக் கண்ட சந்தைகள்

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக.22) சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிந்து 81,622 புள்ளிகளிலும், நிஃப்டி 111 புள்ளிகள் சரிந்து 24,966 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. HDFC, ICICI, Reliance, Wipro, Nestle உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன. <<17479732>>நேற்று உயர்வில்<<>> இருந்த நிலையில், மீண்டும் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

News August 22, 2025

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியா?

image

விஜயகாந்த் பாணியில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா களமிறங்க உள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரேமலதா, இன்னும் கூட்டணி முடிவாகவில்லை, கூட்டணி முடிந்த பிறகு எந்தெந்த தொகுதிகள், யார் யார் போட்டி என்பதை அறிவிப்போம் என்றார். மேலும், ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில்தான் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

error: Content is protected !!