News October 29, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மீண்டும் ஒரு வாய்ப்பு

image

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பல மாவட்டங்களில் நிறைவடைந்திருப்பதால், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடைசி நேரத்தில் பலரும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு நல்வாய்ப்பாக, வாரந்தோறும் கலெக்டர் ஆஃபிஸில் நடைபெறும் குறைதீர் முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க மனு கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அதிகாரிகள் பரிசீலித்து முடிவை தெரிவிப்பார்கள். SHARE IT.

Similar News

News October 30, 2025

ஹாஸ்பிடலில் இருந்து ஷ்ரேயஸ் போட்ட பதிவு

image

ரத்த கசிவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயஸ் தனது உடல்நிலை குறித்து X-ல் பதிவிட்டுள்ளார். தற்போது குணமடைந்து வருவதாகவும், தன்னுடைய உடல்நலனில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலக்கட்டத்தில் தன் மீது அனைவரும் காட்டிய அன்புக்கும், தனக்காக செய்த பிரார்த்தனைகளுக்கும் நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

News October 30, 2025

அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

image

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே. செல்வகுமார், அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருதரப்பும் சீட் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் வகையில், செல்வகுமார் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, சீட் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

News October 30, 2025

அணு ஆயுத போருக்கு ரெடி: டிரம்ப் சூசகம்!

image

ரஷ்யா சமீபத்தில் 2 அணுசக்தி ஆயுதங்களை சோதித்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனைகளை தொடங்குமாறு, USA போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிற நாடுகளின் அணு ஆயுத சோதனைகளால் தான் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், உலகின் வேறு எந்த நாட்டையும் விட USA-விடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சோதனைகளை நிறுத்திவிட்டு, உக்ரைன் போரை முடிக்குமாறும் புதினுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!