News October 9, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களின் நிலை என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் இன்னும் 2 மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி உறுதி அளித்துள்ளார். டிசம்பரில் புதிய பயனர்களுக்கு ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், விண்ணப்பதாரர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது.
Similar News
News October 10, 2025
கரூர் துயரில் உண்மை வெளிவர வேண்டும்: பிசி ஸ்ரீராம்

கரூர் துயரில் யார் மீது தவறு இருந்தாலும் உண்மை வெளிவர வேண்டும் என பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை பற்றி பயமின்றி உரக்கப் பேச வேண்டும் என்றும் காலங் கடந்தால் உண்மை சிதைந்துவிடும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மேலும், இதில் பேச்சு சுதந்திரம் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 10, 2025
CM ஸ்டாலினுக்கு திறமை இல்லை: EPS

திமுக ஆட்சியில், குடிநீரில் மலம் கலக்கும் கொடுமையான செயல் நடப்பதாக EPS விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத அரசு ஆட்சி செய்வதால் தான் வேங்கைவயலில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய EPS, அந்த பிரச்னை தீர்வதற்குள் தற்போது சோழவந்தான் பகுதியில் உள்ள நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் தீர்க்க கூடிய திறமை CM-க்கு திறமை இல்லை என்றும் அவர் சாடினார்.
News October 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 10, புரட்டாசி 24 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை