News September 20, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

image

புதிதாக மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. பயனர்களின் வங்கி கணக்கிற்கு சோதனை முயற்சியாக ₹1 மட்டும் அனுப்பி, அந்த பணம் சரியாக செல்கிறதா என அரசு சார்பில் சோதிக்கப்பட்டு வருகிறதாம். திடீரென உங்கள் வங்கி கணக்கில் ₹1 வரவு வைக்கப்பட்டால் அது இந்த சரிபார்ப்புக்கான நடவடிக்கைதான். யாருக்கேனும் ₹1 வந்ததா?

Similar News

News September 20, 2025

63 வயது பாட்டிக்கும் 31 வயது இளைஞருக்கும் கல்யாணம்❤️❤️

image

63 வயதான அசாரஷி என்பவர், 31 வயது இளைஞரை கரம்பிடித்த சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான அந்த பெண்ணுக்கு 37 வயதில் மகன் இருக்கிறாராம். காஃபி ஷாப்பில் எதேச்சையாக சந்தித்த இருவருக்கும் இடையே நட்பு உருவாகி, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. அசாரஷியின் வயதை அறிந்தும்கூட அந்த இளைஞர் கரம்பிடித்துள்ளார். காதல் ஜோடிக்கு லைக் செய்து நீங்களும் வாழ்த்துங்கள்!

News September 20, 2025

தமிழில் 100/100 வாங்கினால் ₹10,000 பரிசு

image

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழில் 100-க்கு 100 வாங்கினால் ₹10,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறை முப்பெரும் விழாவில் முதற்கட்டமாக 142 மாணவர்களுக்கு CM, தலா ₹10,000 காசோலையை வழங்கி பாராட்டினார். நல்லா படிச்சு ₹10,000 வாங்குங்க மாணவர்களே..

News September 20, 2025

மர்மம் நிறைந்த இடங்கள் PHOTOS

image

இந்தியா வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்ல, பல மர்மங்களும் நிறைந்த நாடாகும். சில இடங்கள், அறிவியலை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற மர்மம் நிறைந்த சில இடங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று மர்மம் நிறைந்த வேறு ஏதேனும் இடம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!