News September 2, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், தமிழகம் திரும்பியதும் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான மகளிருக்கு எப்போது ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வெளியிட உள்ளதாம். தயாராக இருங்க தாய்மார்களே..!
Similar News
News September 2, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. இறுதி அஞ்சலி

<<17594155>>மறைந்த நடிகர் குரியகோஸ் ரங்கா<<>>(75) உடல் அஞ்சலிக்காக சென்னை அயனம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. திரைபிரபலங்கள் பலரும் குரியகோஸ் ரங்கா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. குறுகிய காலத்தில் சரோஜா தேவி, மதன் பாப், குரியகோஸ் ரங்கா உள்ளிட்ட திரைபிரபலங்களை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. RIP
News September 2, 2025
நீங்கள் இறப்பது போன்று கனவு வருகிறதா?

நீங்கள் உயிரிழப்பது போன்று எப்போதாவது கனவில் வந்ததுண்டா? இப்படிப்பட்ட கனவுகளால் நாம் நிஜமாகவே இறந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப்போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப்போகிறோம் என்பதுதான் இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இது போன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது.
News September 2, 2025
சிம்பு பட அப்டேட் பகிர்ந்த வெற்றி மாறன்

சிம்பு படம் குறித்த அப்டேட் அடுத்த 10 – 15 நாள்களில் வெளியாகும் என வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். அதேபோல் ‘விசாரணை’ படத்தின் கதையை கேட்காமலேயே தனுஷ் ₹2.5 கோடி கொடுத்ததாகவும், ஆஸ்கர் விருது பிரசாரத்திற்காக ₹3.5 கோடி செலவு செய்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், அப்படம் ₹3.85 கோடி மட்டுமே வசூலித்ததால், தினேஷ், ஜிவி பிரகாஷ் மற்றும் நானும் சம்பளம் வாங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.