News October 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. ரூல்ஸ் மாறுது!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ₹8,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ₹1,000 பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
Similar News
News October 1, 2025
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசம்: அண்ணாமலை

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த NCRB அறிக்கையை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக சாடியுள்ளார். மேலும், முதியவர்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மையா? PHOTOS

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ‘ஹேர் ஜெல்’ போன்றவற்றை பயன்படுத்தும் இளம் தலைமுறையினருக்கு தேங்காய் எண்ணெயின் பயன்கள் பற்றித் தெரிவதில்லை. தலைமுடியின் ஆரோக்கியம் காக்க தேங்காய் எண்ணெய் தரும் நன்மைகளை மேலே போட்டோக்களாக அளித்துள்ளோம். ஸ்வைப் செய்து பார்த்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்கள்.
News October 1, 2025
போதைப்பொருளுடன் சென்னையில் நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ₹40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை விமான நிலையத்தில் பாலிவுட் துணை நடிகர் விஷால் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Student of the Year உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக விஷால் நடித்திருக்கிறார்.