News August 28, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் (ஜூலை 15) தொடங்கப்பட்டு இன்றோடு 45 நாள்களாகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்களுக்கு அடுத்த மாதமே ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News March 3, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 626 ▶குறள்:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
▶பொருள்: இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?.
News March 3, 2026
ஈரான் அமைதியாக இருக்காது: மசூத் பெசஷ்கியான் எச்சரிக்கை

ஈரான் மீது USA, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரானது என அந்நாட்டு அதிபர் பெசஷ்கியான் கூறியுள்ளார். பள்ளி குழந்தைகள், ஹாஸ்பிடல் நோயாளிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், இது மிகவும் கொடூரமான செயல் என வருந்தியுள்ளார். இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், ஈரான் சரணடையாது; அமைதி காக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
News March 3, 2026
திமுகவை மிரட்டும் காங்கிரஸ்: வானதி சீனிவாசன்

2026 தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விஜய்யை காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டுவதாக குறிப்பிட்ட அவர், ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் இன்றி வெற்றிபெற முடியாத பலவீனமான நிலையில் திமுக இருப்பதாக விமர்சித்துள்ளார். அதனால் தான், CM ஸ்டாலின் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார் என பேசியுள்ளார்.


