News September 16, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு ஏமாற்றம்

புதிதாக 17 லட்சத்திற்கு மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல், அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.15-ல் வெளியாகும் என கூறப்பட்டது. இதனால், அரசின் அறிவிப்பு வெளியாகும் என நேற்று ஆர்வமுடன் காத்திருந்த மகளிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
‘இறந்த மகளுடன் தினமும் பேசுகிறேன்’

தற்கொலை செய்து கொண்ட தனது மகள் மீரா குறித்து விஜய் ஆண்டனி எமோஷனலாக பேசியுள்ளார். மகளின் இழப்பு குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, ‘இது இழப்பு இல்லை. அவள் என்னுடன்தான் இருக்கிறாள், அவளுடன் தினமும் பேசுகிறேன், என்னுடனே அவள் பயணிக்கிறாள். அவளை மிஸ் செய்கிறேன் என்று சொன்னால் சரியாக இருக்காது’ என உருக்கமாக பேசினார். 2023-ல் மீரா தனது 16 வயதில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்: ஆதித்யநாத்

பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என சமீபத்தில் SC தீர்ப்பளித்தது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், உ.பி., அரசும் சீராய்வு மனுதாக்கல் செய்யவுள்ளது. உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளிக்கப்படுவதாக CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
News September 16, 2025
10th பாஸ்.. தமிழக அரசில் ₹62,000 சம்பளத்தில் வேலை!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையில் 375 பணியிடங்கள் காலியாகவுள்ளன. 18- 34 வயதுக்குட்பட்ட 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்ச சம்பளமாக ₹62,000 வழங்கப்படும். வரும் 30-ம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <