News February 24, 2025
₹1000 மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான பயனாளிகள் நீக்கம்?

மகளிர் உரிமைத்தொகை பெற்றுவந்த தகுதியான பயனாளிகள், திடீரென நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிக வருமானம் பெறுவோர் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தகுதியானவர்களுக்கு நிறுத்தப்பட்டது ஏனென்று கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்தும், காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.
Similar News
News February 24, 2025
ஜெ.,வை புகழ்ந்த மோடி!

ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு, PM மோடி தனது X பக்கத்தில் தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், TNன் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெ., கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டதாக புகழ்ந்துள்ளார். எப்போதும் அவர் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்ததாக நினைவுகூர்ந்ததுடன், அவருடன் உரையாடும் வாய்ப்பை பெற்றது தனது கௌரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News February 24, 2025
சனிப்பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகள்

வரும் மார்ச்.29 அன்று சனி பகவான் மீன ராசிக்கு செல்வதால், பின்வரும் ராசிகள் ராஜயோகம் பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது: *மகரம்: பணம் வரும். வேலை, வணிகம் மேம்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், காதல் கைகூடும் *துலாம்: செல்வம் அதிகரிக்கும், நல்ல செய்தி தேடிவரும், சிக்கல்கள் நீங்கும் *ரிஷபம்: வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனக்கவலை நீங்கும், திருமணம் கைகூடும்.
News February 24, 2025
விருந்தினர்களை கடத்த சதி? பாகிஸ்தான் உளவு அமைப்பு

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களை கடத்த தீவிரவாத இயக்கம் சதி செய்துள்ளதாக, பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மைதானங்கள், விடுதிகள், வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு CT தொடரை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு உளவுத்துறையின் எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.