News October 23, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது அறிவிப்பு

image

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு <<18021492>>டிச.15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை<<>> வழங்கப்படும் என DCM உதயநிதி அண்மையில் அறிவித்துள்ளார். இதுவரை, 28 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது மனுக்கள் மீதான களஆய்வு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும், நவ.15 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து பணிகளும் நவ.30-க்குள் முடிந்து டிசம்பரில் புதிய பயனர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளது.

Similar News

News October 24, 2025

மது விற்பனை குறைக்க அரசு முயற்சி: முத்துசாமி

image

தீபாவளியையொட்டி ₹790 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக அரசு மது விற்பனைக்கே முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பண்டிகை சமயங்களில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் கொடுத்துள்ளார். உண்மையில் அரசு மது விற்பனை குறைக்கவே முயற்சி எடுப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

News October 24, 2025

பிஹார் தேர்தலில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: PM

image

பிஹாரில் இரட்டை என்ஜின் அரசு அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து வளர்ச்சி பணிகளில் புதிய உத்வேகம் பிறந்ததாக, தேர்தல் பரப்புரையில் PM மோடி தெரிவித்துள்ளார். RJD-யின் மோசமான ஆட்சி குறித்து இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பேசுவார்கள் என்றும், பாஜகவினர் இளைஞர்களிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிஹார் தேர்தலில் இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

News October 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 24, ஐப்பசி 7 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்:12:15 AM – 1:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

error: Content is protected !!