News October 25, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது புதிய அறிவிப்பு

வேலூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தேனியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நிறைவடைந்துவிட்டது. அதேநேரம் இம்மாவட்டங்களில் நவ.14-க்குள் கலெக்டர் ஆபிஸில் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதனிடையே, வரும் 28-ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்களை அறிய <
Similar News
News October 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

9-1-1: Nashville டிவி தொடர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை இசபெல் தாட்(23) இளம் வயதில் உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. charcot-marie-tooth disease நோயால் கால் நரம்பு பாதிக்கப்பட்டு வீல் சேரில்தான் அவரது இறுதி நாள்களை கழித்துள்ளார். மேலும், அவரது நுரையீரல், இதயமும் பாதிக்கப்பட்டு இசபெல் தாட் உயிர்பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News October 25, 2025
விஜய் கேட்டதால் அந்த ரோலில் நடிக்கவில்லை: ரோஜா

‘நீங்களா மாமியார் கேரக்டர் பண்றீங்க, என்னால ஏத்துக்கவே முடியல’ என்று விஜய், ‘காவலன்’ ஷூட்டிங்கின் போது தன்னிடம் கேட்டதாக ரோஜா கூறியுள்ளார். இதேபோல், தெலுங்கு நடிகர் கோபிசந்த்தும் கேட்டதால், இனி அம்மா, மாமியார் ரோல்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு ராஜமாதா கேரக்டர் கிடைத்தது போல, தனக்கும் வலுவான ரோல் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
News October 25, 2025
மத்திய அரசில் 258 காலியிடங்கள்.. ₹44,900 சம்பளம்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி முடித்து, 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹44,900 மாதச்சம்பளமாக வழங்கப்படும். நவம்பர் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <


