News March 22, 2025
புதிய ரேஷன் கார்டுகளுக்கு ₹1,000 மகளிர் உரிமை தொகை!

புதிதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்த 57,327 பேருக்கு ‘Smart Card’ அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், தகுதி வாய்ந்த நபர்கள் ₹1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியிருந்த நிலையில், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 24, 2025
அங்கன்வாடியில் 16,897 புதிய வேலை: அமைச்சர் கீதா

அங்கன்வாடிகளில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 16,897 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளுக்கு 7,900 புதிய பணியாளர்கள் மற்றும் சத்துணவு கூடங்களுக்கு 8,997 சமையலர்கள் நியமனம் தொடர்பாக கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
News March 24, 2025
பிரதமரை சந்திக்க முடிவு.. முதல்வர் விளக்கம்

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்புக்கு ஏதிராக நடந்த கூட்டுக் குழு கூட்டம், தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரதமரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 24, 2025
ஹர்பஜன் சிங்கை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.. ஏன்?

SRHக்கு எதிரான ஆட்டத்தில் 18வது ஓவரை RR வீரர் ஆர்ச்சர் வீசினார். அப்போது ஆர்ச்சரின் பந்துகளை கிளாசன் பவுண்டரிகளாக விளாசினார். Commentary-ல் இருந்த ஹர்பஜன், லண்டனில் ‘ப்ளாக் டாக்ஸி’ மீட்டர் போல் ஆர்ச்சரின் மீட்டரும் ஏறிக்கொண்டே செல்கிறது என விமர்சித்தார். நிறத்தை கேலி செய்யும் வகையில் அவர் பேசியதற்கு கண்டனங்கள் குவிகின்றன. Commentary-ல் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.