News December 7, 2024
பொங்கலுக்கு ₹1000 + மகளிர் உரிமைத் தொகை ₹1000

பொங்கல் சிறப்புத் தொகுப்போடு சேர்த்து மக்களுக்கு ₹1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரிசி, பருப்பு, கரும்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதோடு சேர்த்து ₹1000 அளிக்கப்பட்டால், ஜனவரி மாதம் மகளிர் உரிமைத் தொகையுடன் சேர்ந்து குடும்பத்திற்கு ₹2000 கிடைக்கும்.
Similar News
News April 2, 2026
அபிஷேக் சர்மாவை கேப்டனாக்காதது ஏன்? யுவராஜ்

SRH கேப்டன்சியை அபிஷேக் சர்மாவுக்கு வழங்காததற்கு யுவராஜ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 7 சீசன்களாக SRH அணிக்காக சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் விளையாடி வரும் அவருக்கு, நிச்சயமாக கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என யுவி கூறியுள்ளார். பஞ்சாப் மாநில அணிக்கு அவர் கேப்டனாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நடப்பு சீசனில் SRH அணியை இஷான் கிஷன் வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2026
அது ஹீரோயின் அல்ல, ஹெராயின்: நயினார்

ஒரு பாட்டுக்காக ஓட்டு வந்துவிடும் என திமுக கருதுகிறது என்றால், மக்களை எப்படி பார்க்கிறது என்று தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் TN-ல் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளிகள் முன் மிட்டாய் விற்ற காலம் போய், இப்போது கஞ்சா விற்கிறார்கள் என சாடியுள்ளார். இந்நிலையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்பது ஹீரோயின் அல்ல அது ஹெராயின் என்று விமர்சித்துள்ளார்..
News April 2, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் விழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.6 (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. அதேபோல், தேர்தலையொட்டி, ஏப்.7 முதல் 10 வரை புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT


