News March 31, 2024
₹1000.. ஒருநாள் தள்ளிப்போகிறது

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கள் கிழமைதான் இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 15, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டு வரும் பெண்களுக்கு சற்றுமுன் தித்திப்பான செய்தி வெளியாகியுள்ளது. ஆம்! பொங்கல் நாளில் தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை முதலே 1.40 கோடி குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் 29-வது தவணையாக ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. உங்க செல்போனுக்கு மெசேஜ் வந்துவிட்டதா என்பதை செக் பண்ணுங்க!
News January 15, 2026
நீங்க இன்று 2 பொங்கல் வைப்பீங்களா?

பொங்கல் நாளில், படையலுக்கான பொங்கல் 2 வகைகளாக வைக்கப்படும். பச்சரிசி சாதத்தை குழைய வைத்து செய்யும் வெண் பொங்கல் ஒரு பானையிலும், சர்க்கரை பொங்கல் மற்றொரு பானையிலும் வைக்கப்படும். சர்க்கரை பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். வெண் பொங்கல் இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இது அறுவடை, குடும்பம் & செல்வ செழிப்பையும் குறிக்கிறது. நீங்க எத்தனை பானை பொங்கல் வைப்பீங்க?
News January 15, 2026
EPS ஊதுகுழலாக ‘டால்பின்’ அன்புமணி: அமைச்சர்

பொங்கல் நாளில் கூட உழவர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக விமர்சித்த அன்புமணிக்கு அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். சொந்த கட்சியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின் துயர் என்னவென்று ஒன்றும் தெரியாது. தொடர்ந்து பொய்யான தகவலை கூறுகிறார் என்றும், கூட்டணியின் எஜமானர்களை திருப்திபடுத்தும் நோக்குடன் இபிஎஸ்ஸின் ஊதுகுழலாக அன்புமணி இருப்பதாகவும் சாடினார்.


