News January 10, 2025

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ₹1000

image

இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ₹1000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அது கிடைக்கப் பெறுவதில்லை. ஆகையால், ஓய்வு பெற்று துறைநிலை ஓய்வூதியம் பெறும் கோயில் பணியாளர்களுக்கு ₹1000 வழங்கப்படுகிறது.

Similar News

News December 7, 2025

BREAKING: செங்கோட்டையன் அறிவித்தார்.. விஜய் புதிய முடிவு

image

ஈரோட்டில் வரும் 16-ம் தேதி விஜய்யின் கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். <<18493694>>முன்னதாக பவளத்தாம்பாளையத்தில்<<>> அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு மற்றொரு கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் ஈரோட்டில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் சூளுரைத்தார்.

News December 7, 2025

துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

image

தெ.ஆப்பிரிக்காவின் நிர்வாக தலைநகரான பிரிட்டோரியா அருகே உள்ள சால்ஸ்வில்லே நகரில், மதுபான விடுதியில் நுழைந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 3 வயது, 12 வயது என 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News December 7, 2025

நடிகை சோனாரிகாவிற்கு குழந்தை பிறந்தது ❤️❤️❤️

image

கெளதம் கார்த்திக்கின் ‘இந்திரஜித்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனாரிகா படோரியா. இவருக்கு, தொழிலதிபர் விகாஸ் பரஷார் உடன் 2024-ல் திருமணம் முடிந்தது. இந்நிலையில், இத்தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மழலை வாசமிக்க பிஞ்சு கால் விரல்களை பிடித்தவாறு சோனாரிகா வெளியிட்ட போட்டோவுக்கு லைக்குகள் குவிகின்றன. மேலும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

error: Content is protected !!