News July 11, 2024
ஜூலை 15 முதல் 1.48 லட்சம் பேருக்கு ₹1000

தமிழகத்தில் மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு வரும் 15ஆம் தேதி முதல், மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிகழ்ந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2ஆவது கட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
வெள்ளை பட்டாணி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

புரதம், நார்ச்சத்தின் சிறந்த மூலமான வெள்ளை பட்டாணியை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. *குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. *துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, சருமத்தை மிருதுவாக்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. *இரும்புச்சத்து RBC-யை அதிகரிக்கிறது.
News November 20, 2025
மார்பிங் செய்யப்பட்ட போட்டோ.. கீர்த்தி வேதனை

தனது போட்டோவை AI-ல் எடிட் செய்து பரப்பியது தன்னை வெகுவாக காயப்படுத்தியதாக நடிகை கீர்த்தி சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த போது, உண்மைக்கு மிக நெருக்கமாக இருந்ததாகவும், அது பொய் என்பதை கண்டுபிடிக்கவே சில நிமிடங்கள் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், AI தற்போது பூதாகரமான பிரச்னையாக மாறி வருவதாகவும், மனிதர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம்.. SCAM ALERT

பிஹாரில் NDA கூட்டணி வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக, அனைவருக்கும் 3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம் என PM மோடி அறிவித்திருக்கிறாராம். இப்படியொரு செய்தி வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது. இது உண்மையில்லை என மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அரசு இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உஷாரா இருங்க, எந்த லிங்க்கையும் கிளிக் பண்ணாதீங்க மக்களே!


