News March 1, 2025
நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ₹1,000 அபராதம்

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ₹1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
Similar News
News March 18, 2026
வரலாற்றில் இன்று

➤1662 – உலகின் முதல் பேருந்து சேவை பிரான்ஸில் தொடங்கியது. ➤1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி 6 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ➤1965 – சோவியத் வீரர் அலெக்சி லியோனொவ், விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். ➤ 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
News March 18, 2026
தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக மழை பெய்வதையும் பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றூம் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News March 18, 2026
நடிகைகளுக்கு குடும்பம் இருக்கும்: இயக்குநர் அமீர்

நடிகை நயன் தாரா குறித்து <<19407643>>C.V. சண்முகம் <<>>பேசியது சர்ச்சையான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அரசியல் மேடைகளில் அவர்களைப் பற்றி தவறாக பேச வேண்டாம் எனவும், நாகரிக அரசியலை பழகுங்கள் அரசியல்வாதிகளே எனவும் இயக்குநர் அமீர் அறிவுறுத்தியுள்ளார்.


