News October 7, 2025

₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது: இதை செய்யாதீங்க

image

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டியது செல்போன் எண். ஆதார், வங்கி பாஸ்புக்குடன் ஒரே எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். அப்போதுதான், பயனாளர்களை அரசால் எளிதில் அடையாளம் காண முடியும். வெவ்வேறு எண் இருந்தால், அரசின் குறுஞ்செய்தி சென்றடைவதிலும் சிக்கல் எழும். நவம்பர் வரை உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

Similar News

News October 7, 2025

தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

image

தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்க TN அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.20 திங்களன்று தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். தற்போது, அக்.21 அன்று விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே அக்.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாம். SHARE IT.

News October 7, 2025

பிஹாரில் NDA கூட்டணியில் விரிசலா?

image

பிஹாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், NDA-வில் சீட் ஷேரிங் முடிந்தபாடில்லை. சிராக் பாஸ்வானின் LJP (Ram Vilas) 40 சீட்கள் கேட்க, 25 தான் பைனல் என BJP கைவிரித்துவிட்டது. இதனால், பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்தால் என்னவென்று சிராக் நினைக்கிறாராம். ம.அமைச்சரான சிராக்கிற்கு CM பதவி மீது ஒரு கண் இருப்பதாக கூறப்படும் நிலையில், நடப்பதை எதிர் தரப்பான ’மகாகத்பந்தன்’ உன்னிப்பாக கவனித்து வருகிறது.

News October 7, 2025

செரிமான பிரச்னையா? இதை ட்ரை பண்ணுங்க

image

செரிமானம் சரியாக இருந்தாலே உடலில் மற்ற செயல்பாடுகள் பாதிப்படையாமல் சீராக இருக்கும். தினமும் சில எளிய பழக்கங்கள் மூலம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுபோன்று வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!