News April 22, 2025

ஒரு வேலையும் செய்யாத நிறுவனத்திற்கு ₹1,000 கோடி!

image

தொடங்கி 2 மாதங்களே ஆன, எந்தவித செயல்பாடுகளும் இல்லாத URSA Clusters என்ற நிறுவனத்திற்கு, ஆந்திர அரசு ₹1,000 கோடி மதிப்புள்ள 59.6 ஏக்கர் நிலத்தை சொற்பமான தொகைக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹10 லட்சமாக இருக்கிறது. ஆனால், ₹5,728 கோடி முதலீடு செய்யும் என ஆந்திர அரசு எப்படி கூறுகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

Similar News

News April 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 23- சித்திரை- 10 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை

News April 23, 2025

விருதுகளை விட இதுதான் முக்கியம்: சாய் பல்லவி

image

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விருதுகள் கிடைப்பதை விட ரசிகர்களின் அன்பை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திரையரங்கில் தனது கதாபாத்திரங்களை கண்டு அந்த எமோஷனுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையே உண்மையான வெற்றியாக பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 23, 2025

10 பேருக்கு தலா ₹70,000.. துபேவின் தாராள மனசு!

image

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 10 தடகள வீரர்களுக்கு தலா ₹70,000 வழங்குவேன் என ஷிவம் துபே உறுதியளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வருடாந்தர விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், இந்த சிறிய உதவித்தொகை, தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும், தேசத்திற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு கூடுதல் உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!