News December 31, 2025
₹1,000 கட்டி உடனே செய்யுங்க… நள்ளிரவு முதல் செல்லாது

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை, இதுவரை இணைக்கவில்லை என்றால் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால், நாளை முதல் PAN எண் செல்லாது என அறிவிக்கப்படும். ஏற்கனவே காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது PAN – ஆதாரை இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், 2024 அக்.1-க்கு பின் PAN அட்டை வாங்கியவர்கள் அபராதம் இன்றி இணைத்துக் கொள்ளலாம்.
Similar News
News January 1, 2026
T20I WC.. இதுதான் ஆஸி., படை!

2026 T20 WC-க்கான ஆஸி., அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ்(கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானோலி, பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் & ஆடம் ஸாம்பா. பந்தயம் அடிக்குமா இந்த அணி?
News January 1, 2026
FLASH: மீண்டும் அதிமுகவில் இணைந்த OPS அணியினர்

OPS அணியிலிருந்து விலகி திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருடன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட், ஹரீஷ்குமார் ஆகியோரும் இணைந்தனர். மேலும், மநீம திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிறிஸ்டிதாஸ் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
News January 1, 2026
2026ல் உங்களுக்கு நீங்க சொல்ல நினைக்கும் Advice என்ன?

புத்தாண்டு தொடங்கிவிட்டது. பல புதிய கனவுகள் இருக்கும். பல புது முயற்சிகள் மேற்கொள்ள திட்டம் போட்டிருப்பீர்கள். இந்த ஆண்டில் பல விஷயங்களை செய்து முடித்திட வேண்டும் என பலர் பல Resolution-ம் எடுத்திருப்பீர்கள். இந்த ஆண்டில் நான் இதை நிச்சயமாக தவிர்த்து விட வேண்டும் என உங்களுக்கே உங்களுக்கு நீங்களே ஒரு Advice கொடுக்க விரும்பினால் என்ன சொல்வீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க….


