News January 15, 2026

₹1,000 உரிமைத் தொகை.. முக்கிய அறிவிப்பு வந்தது

image

₹1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகையானது தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை மட்டுமல்லாது, வேறு எந்தவித உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும் வேலைவாய்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.

Similar News

News February 14, 2026

காதலர் தினர்: லவ்வர்ஸ்களுக்கு இது எச்சரிக்கை

image

இந்தியாவில் பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது அணைத்துக்கொள்வது (PDA) வெளிப்படையாக சட்டவிரோதமல்ல என்றாலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294-ன் கீழ் ஆபாச செயலாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. “பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்” என்ற அடிப்படையில், காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்; எனினும் இது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றமாகும்.

News February 14, 2026

தேவைகளைக் கூச்சப்படாமல் கேளுங்கள்: பிரதீப்

image

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், தங்களுக்கான தேவைகளை கூச்சப்படாமல் கேட்க வேண்டும் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வாழ்க்கை மிக சிறியது; நமக்கான தேவைகளை கேட்க எப்போதும் கூச்சப்படாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் தைரியமாக கேட்டு விடுங்கள்; கேட்டு மறுக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.

News February 14, 2026

பிப்ரவரி 14: வரலாற்றில் இன்று

image

*1924 – ஐபிஎம் (IBM) நிறுவனம் அமைக்கப்பட்டது.
*1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
*2019 – புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள்
*1483 – முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்
* 1952 – சுஷ்மா சுவராஜ் பிறந்த தினம்
* காதலர் தினம்

error: Content is protected !!