News December 23, 2025
₹100 கோடி பரிசு அறிவித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவைச் சேர்ந்த யாராவது ஒருவர் குவாண்டம் அறிவியலுக்காக நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு ₹100 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதி வேலியில் இன்று Quantum Talk by CM CBN என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சந்திரபாபு, குவாண்டம் மற்றும் அது தொடர்பான துறைகளில் நிபுணர்களை உருவாக்க ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News December 24, 2025
மனதை உலுக்கிய கூட்ட நெரிசல் மரணங்கள்.. REWIND 2025

ஏனோ 2025 இந்தியாவில் பெரும் சோகங்களை கொடுத்துவிட்டது. பல இடங்களிலும் மக்கள் கொத்து கொத்தாக மரணித்தனர். அப்படி கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த துயர நினைவுகளை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பார்க்கவும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இவை மறக்க முடியாத வடுவாக மக்களின் மனதில் இருக்கும்.
News December 24, 2025
பொங்கல் பரிசு ₹5,000.. அமைச்சர் கொடுத்த அப்டேட்

பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வரை வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, ரேஷன் கார்டுகளுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், CM ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற அப்டேட் கொடுத்துள்ளார்.
News December 24, 2025
‘மெர்சல்’ சினிமா பாணியில் நடந்த ரியல் சம்பவம்!

மெர்சல் படத்தில் ஏர்போர்ட்டில் இளம்பெண்ணை தாவி குதித்து விஜய் காப்பாற்றுவது போலவே ரியலாக கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொச்சியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வினுவை(40) அவ்வழியாக சென்ற டாக்டர்கள் தாமஸ், திதியா, மனூப் மூவரும் சிறிதும் தாமதிக்காமல், நடுரோட்டில் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அவரின் கழுத்தில் துளையிட்டு ஸ்ட்ரா மூலம் மூச்சுவிட செய்து காப்பாற்றியுள்ளனர். Congrats Doctors!


