News September 1, 2025
மது பாட்டிலுக்கு ₹10 பிரச்னை.. டாஸ்மாக் புதிய உத்தரவு

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு <<17580578>>டாஸ்மாக் ஊழியர்கள்<<>> எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்றும், காலி பாட்டில்களை வைக்க கடையில் இடவசதி இல்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், திட்டத்தை முறையாக செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் குழு அமைத்துள்ளது. நிலவரத்தை ஆராய்ந்து 5 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு ஆபத்து!

Carbon Emission, புவி வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில், சென்னை உள்பட 7 மாவட்டங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. அண்ணா பல்கலை.,யின் காலநிலை, பேரிடர் மேலாண்மை மையத்தின் Prof.ராமச்சந்திரன் கூறுகையில், 1991 – 2023 வரை ஏற்பட்ட புயல், காலநிலை புள்ளி விவரங்களின் படி, 2100-ம் ஆண்டில் கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 25 CM கடல் மட்ட உயர்வு இருக்குமாம். உஷார்!
News September 4, 2025
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. பயத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவாகியுள்ளது. நிலப்பரப்புக்கு கீழ் 135 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் புதிய உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.
News September 4, 2025
BREAKING: மேற்கு வங்கத்தில் 6 பாஜக MLA-க்கள் சஸ்பெண்ட்

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 6 பாஜக MLA-க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பாஜக MLA-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட BJP MLA சங்கர் கோஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.