News October 25, 2024

நடத்துநரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிவாரணம்

image

சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 6, 2026

பொங்கல் பரிசுத் தொகை ₹5,000 வழங்க வேண்டும்: EPS

image

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள EPS, எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ₹5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ₹3,000 மட்டும் கொடுத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மக்களுக்கு ₹5,000 வழங்க திமுக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News January 6, 2026

‘ஜனநாயகன்’ படக்குழு ஐகோர்ட்டில் அவசர மனு!

image

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே, தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்ட நிலையில், இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை என படக்குழு குற்றம்சாட்டியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் சுமார் 2 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது.

News January 6, 2026

புது ட்ரெஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா?

image

அடிக்கடி புது டிரெஸ்களை வாங்கும் Fast Fashion ஆசை, இன்று சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் ஆடைக் கழிவுகள் கடலையும், மண்ணையும் விஷமாக்குவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஒரு டிரஸ்ஸை தயாரிக்க பல லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம். இதை தயாரிப்பவர்களின் தவறு என்று சாக்கு சொல்ல வேண்டாம். தேவைக்கேற்பவே உற்பத்தி. தேவைக்கு மட்டுமே ஆடைகளை வாங்குங்கள், சுற்றுச்சூழலை காப்பாற்றுங்கள்.

error: Content is protected !!