News February 28, 2026

₹10 லட்சம் மருத்துவ காப்பீடு: இத்திட்டத்தில் சேருங்க

image

PM ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துக்கு ஆண்டுதோறும் ₹5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. NHA beneficiary portal-ல் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பர் & இருப்பிட சான்றிதழை கொடுத்து எளிதில் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் 70 வயதை கடந்தோருக்கு ₹10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News March 1, 2026

கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது கடமை: ஈரான்

image

உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது, ஈரானின் சட்டபூர்வமான உரிமை மற்றும் கடமை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். கமேனியின் படுகொலை என்பது உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான, குறிப்பாக ஷியா பிரிவினருக்கு எதிரான வெளிப்படையான போர் அறிவிப்பு என்றும், இந்த வரலாற்று குற்றத்தைச் செய்தவர்களை பழிவாங்குவது தனது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 1, 2026

இடிபாடுகளுக்கு மத்தியில் கமேனியின் உடல் (PHOTO)

image

இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டாக நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே மறைந்த கமேனியின் இறுதி போட்டோக்கள் என்று ஈரான் ஊடங்களில் சில படங்கள் வருகிறது. இடிபாடுகளுக்கு இடையே அவரின் உடல் சிக்கியிருப்பது அந்த போட்டோக்களின் மூலம் தெரிகிறது.

News March 1, 2026

வெள்ளி கொலுசில் இவ்வளவு நன்மைகளா?

image

வெள்ளி உடலிலிருந்து வெளியேறும் ஆற்றலை மீண்டும் உடலுக்கே அனுப்பும் உலோகம். 1,000 ஆண்டுகளுக்கு முன் நெடுந்தூரம் பயணிப்போர் வெள்ளிக் காசுகளை குடிநீர் பாத்திரங்களில் போடுவார்களாம், அது நீரை சுத்திகரிக்குமாம். வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள் கொலுசு அணிவதால் ரத்த ஓட்டம் சீராகி கால்கள் வலிமை குன்றாமல் பார்த்துக்கொள்ளுமாம். மெட்டி அணிவது பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளை பலப்படுத்துகிறது. SHARE IT

error: Content is protected !!