News March 29, 2026

₹10 கோடி கிடைத்தும் நேர்மையை கைவிடாத பெண்

image

வங்கி கணக்கில் தவறுதலாக ₹1,000 வரவு வைக்கப்பட்டாலே அதை யாரும் திருப்பி தர மாட்டார்கள். ஆனால் உ.பி.,யை சேர்ந்த ரீட்டா என்ற பெண்மணியோ இதற்கு மாறாக தனது நேர்மையை வெளிபடுத்தியுள்ளார். அவரது வங்கி கணக்கில் தவறுதலாக ₹9,99,49,588 வரவு வைக்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட தொடாமல், இதுகுறித்து வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 5, 2026

பூமியைப் போல 45 கோள்கள்!

image

பூமியை போலவே இருக்கும் 45 கிரகங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். நாசாவில் உள்ள 6000-க்கும் அதிகமான கிரகங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே TRAPPIST-1 என்ற கோள் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அது வாழத் தகுந்த கோளாக இருந்தாலும் அங்கு உயிர்கள் இருப்பதாக உறுதியாக சொல்ல முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News April 5, 2026

பூமியைப் போல 45 கோள்கள்!

image

அமெரிக்க விஞ்ஞானிகள் பூமியை போலவே இருக்கும் 45 கிரகங்களை அடையாளம் கண்டுள்ளனர். நாசாவில் உள்ள 6Kக்கும் அதிகமான கிரகங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே TRAPPIST-1 என்ற கோள் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், அது வாழத் தகுந்த கோளாக இருந்தாலும் அங்கு உயிர்கள் இருப்பதாக உறுதியாக சொல்ல முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News April 5, 2026

புத்தர் பொன்மொழிகள்

image

▶நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.
▶நமக்கு நடக்கும் அனைத்திற்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும்.
▶மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
▶எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

error: Content is protected !!