News August 8, 2024

பதிவு செய்ய தவறினால் ₹1 லட்சம் அபராதம்!

image

பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்களை GST அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக GST சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக CBIC வரி வாரியம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள், இயந்திரங்களைப் பதிவு செய்ய தவறும்பட்சத்தில் அக்.,1ஆம் தேதி முதல் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Similar News

News December 8, 2025

OPS உடன் டெல்லி போட்ட டீல் ஓகே ஆனதா?

image

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த OPS, கையோடு ஒரு டீல் பேசிவந்ததாக தகவல் கசிந்துள்ளது. OPS-ஐ தங்களது அணியில் சேர்க்க விரும்பும் டெல்லி பாஜக, NDA கூட்டணிக்கு வந்தால் அவர் தொடங்கும் புதிய கட்சிக்கு 5 சீட்களை ஒதுக்குகிறோம் என டீல் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த ஆலோசனையில் OPS இறங்கியிருக்கிறாராம். எனவே, டிச.15 இதுபற்றி Official தகவல் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

News December 8, 2025

சற்றுமுன்: விலை ₹1000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லாத நிலையில், வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹198-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளதால், நம்மூரில் வரும் நாள்களில் விலை மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News December 8, 2025

EPS கட்சியை அழிக்கிறார்: செங்கோட்டையன்

image

அதிகாரத்தில் இருக்கிறேன் என்ற மனநிலையில் EPS கட்சியை அழிக்கிறார் என செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். தன்னிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறிய அவர், அவரால் பாதிக்கப்படுவது அதிமுக என்ற மக்கள் இயக்கமும், கோடான கோடித் தொண்டர்களும்தான் என கூறியுள்ளார். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாமல் போனதற்கு EPS-ன் மனநிலை மட்டுமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!