News November 28, 2024
வங்கிகளுக்கு திரும்பி வராத ₹1.70 லட்சம் கோடி கடன்

வங்கிகளிடம் திரும்ப செலுத்தப்படாத கடன், வாராக் கடன் எனப்படுகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டில் வாராக்கடன் 18% குறைந்துள்ளது. அதாவது ₹2.08 லட்சம் கோடியிலிருந்து ₹1.70 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இருப்பினும், PNB, கனரா, HDFC, BOI, இந்தியன் வங்கி, AXIS-இல் அக்கடன் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக PNB ₹18,317 கோடி வாராக்கடனுடன் முதலிடத்தில் உள்ளது.
Similar News
News August 20, 2025
CPR வென்றால் தமிழர்களுக்கு பெருமை: பிரேமலதா

NDA கூட்டணி வேட்பாளர் CPR வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெருமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, அதே சமயம் பல திட்டங்கள் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். கூட்டணி குறித்து ஜனவரியிலேயே அறிவிப்பதாக கூறியுள்ள தேமுதிக, NDA வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
News August 20, 2025
M.Ed. விண்ணப்பப்பதிவு.. இன்றே கடைசி நாள்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான M.Ed. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.11-ல் தொடங்கியது. இப்பாடப்பிரிவில் 6 அரசுக் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்நிலையில் இதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் (ஆக.20) நிறைவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
News August 20, 2025
AUS vs SA முதல் ODI: LSG வீரர்கள் அசத்தல்

SA vs AUS இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 98 ரன்கள் வித்தியாசத்தில் SA வென்றது. SA அணியில் மார்க்ரம் பொறுப்புடன் விளையாடி 81 பந்துகளுக்கு 82 ரன்கள் அடித்தார். அந்த அணியில் அதிக ரன்கள் அடித்தது அவர் தான். அதைப்போல் ஆஸி., அணியில் மிட்சல் மார்ஷ் 88 ரன்களை அடித்தார். இவர்கள் இருவரும் IPL-ல் LSG அணிக்காக சிறப்பாக விளையாடிய நிலையில், தற்போது அதே பார்மை தொடர்கின்றனர்.