News March 15, 2025
தமிழகத்தில் ஒவ்வொரு நபருக்கும் ₹1.32 லட்சம் கடன்

TN அரசின் கடன் வரும் நிதியாண்டில் ₹9.30 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இக்கடனை ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால், தலா ஒரு குடும்பத்துக்கு ₹4.13 லட்சம் கடன் இருக்கும். TNல் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 7.03 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதன் அடிப்படையில், தனி நபருக்கு கணக்கிட்டால் ஒவ்வொரு நபருக்கும் தலா ₹1.32 லட்சம் கடன் உள்ளது.
Similar News
News April 2, 2026
₹1,000 கோடி ஊழல்.. நேருவை விமர்சித்த விஜய்

திருச்சி பிரசாரத்தில், அமைச்சர் KN நேருவை விஜய் மறைமுகமாக விமர்சித்தார். இங்கு (திருச்சி) ஒரு அமைச்சர் உள்ளார். நகராட்சித் துறையில் வேலை வாங்கி தருவதாக ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் என விமர்சித்தார். கல்லூரி உதவி பேராசிரியர் பணி 2,000 பேருக்கு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 5 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
News April 2, 2026
விடுமுறை.. 4 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிரமமின்றி ஊர்களுக்குச் செல்ல, இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிறு வரை 4 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 2,257 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி (அ) <
News April 2, 2026
சாத்தான்குளம் வழக்கு: தூக்கு தண்டனை வழங்க கோரும் CBI

சாத்தான்குளம் லாக்-அப் மரண வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கான தண்டனை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய CBI & தமிழக அரசுக்கு மதுரை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 9 பேருக்கும் தூக்கு (அ) ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என CBI வாதிட்டுள்ளது. இதனையடுத்து, தண்டனை விவரம் ஏப்.6-ல் வழங்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.


