News December 22, 2025

₹1 லட்சத்துக்கு ஆணுறை.. யாரு சாமி நீ?

image

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தனது ஆண்டு இறுதி அறிக்கையில் ஷாப்பிங் குறித்த சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர், ஒரு வருடத்தில் ₹1.06 லட்சத்துக்கு ஆணுறைகள் மட்டும் வாங்கியுள்ளார். அவர் மாதத்திற்கு சராசரியாக 19 ஆர்டர்கள் வீதம், மொத்தம் 228 ஆர்டர்களை செய்துள்ளார். மேலும், ஸ்விக்கி நிறுவனம், தங்களுக்கு வரும் ஒவ்வொரு 127 ஆர்டர்களில், ஒன்று ஆணுறை ஆர்டர் என்று தெரிவித்துள்ளது.

Similar News

News December 25, 2025

சேலத்தில் வசமாக சிக்கிய பெண்!

image

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் கைதான ரமணி (36) மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு ‘சரித்திர பதிவேடு’ குற்றவாளி ஆவார். சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 25, 2025

வசீகரமான மார்கழி கோலங்கள்!

image

மார்கழி அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிடுவதால், தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு நல்ல ஆற்றலும், ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் தீய சக்திகள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், வாசலை அலங்கரிக்கும் சில ஸ்பெஷலான மார்கழி கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை Swipe செய்து பார்த்து, வீட்டு வாசலில் முயற்சிக்கவும்.

News December 25, 2025

விஜய் + ஓபிஎஸ் + டிடிவி கூட்டணி.. முடிவு இறுதியானது

image

NDA-வில் இருந்து பிரிந்த TTV, OPS தரப்பு இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இதனிடையே நடைபெற்ற கூட்டத்தில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என OPS கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விரைவில் OPS நல்ல முடிவை எடுப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளார். அத்துடன், அமமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் TVK + OPS + TTV கூட்டணி உறுதியாகும் என கூறுகின்றனர்.

error: Content is protected !!