News December 22, 2025
₹1 ரீசார்ஜுக்கு 30 நாள்கள்.. பம்பர் ஆஃபர்!

புதிய யூஸர்களை கவரும் வகையில் BSNL தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான ஆஃபர்களை அளித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பரிசாக, ஃப்ரீ சிம் கார்டுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 GB டேட்டா & 100 SMS-களை 30 நாள்களுக்கு வெறும் ₹1-ல் வழங்குகிறது. சிம் ஃப்ரீ என்றாலும், இந்த ஆஃபர்களை பெற, ₹1 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். இச்சலுகை ஜனவரி 5 தேதி வரை மட்டுமே கிடைக்கும்.
Similar News
News December 29, 2025
கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க அனுமதி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும். அதன்படி வரும் ஜனவரியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்த பின்னர் அகழாய்வு பணிகள் தொடங்கும். இதுவரை சுமார் 20,000 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 11-ம் கட்ட ஆய்வு மூலம் வைகை நாகரிகத்தின் எஞ்சிய ரகசியங்கள் வெளிவரும்.
News December 29, 2025
மீண்டும் இணைந்தனர்.. அரசியலில் முக்கிய திருப்பம்

மகாராஷ்டிரா மாநில மாநகராட்சித் தேர்தலில் சரத் பவார் – அஜித் பவார் அணிகள் இணைந்து போட்டியிடவுள்ளன. பிம்பரி – சிஞ்ச்வாட் நகராட்சி தேர்தலில் சரத் பவாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். மீண்டும் பவார்கள் கைகோர்த்துள்ளது அம்மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. <<18692105>>மும்பையில்<<>> தனித்தே போட்டியிடவுள்ளதாக அஜித் பவார் தரப்பு அறிவித்திருந்தது.
News December 29, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற ஆப்ஷன் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.


