News March 8, 2026

₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

image

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 1, 2026

BREAKING: திமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்

image

தேர்தலில் சீட் கிடைக்காததால் அதிமுகவை தொடர்ந்து திமுகவிலும் அடுத்தடுத்து பலர் விலகி வருகின்றனர். தி.நகர் சிட்டிங் MLA-வான கருணாநிதி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், வேலூர் EX MP-யின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார் ராஜினாமா செய்தார். இதனிடையே, பென்னாகரத்தில் சீட் கிடைக்காததால் EX MLA-வான PNP இன்பசேகரன் பாமகவில் இணைய உள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது.

News April 1, 2026

தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சா? போலீஸ் விளக்கம்

image

சென்னை அயனாவரத்தில் நடந்த <<19528051>>தவெக<<>> பொதுக்கூட்டத்தில் மது பாட்டில்கள் வீசப்பட்டதில் பெண்கள் காயமடைந்தனர். இதற்கு திமுக அரசே காரணம் என்று தவெக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள லாட்ஜில் இருவர் பாட்டில்களை வீசி சண்டையிட்டுள்ளனர். அப்போது அதன் சில துண்டுகள் கூட்டத்தில் வீசப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் விளக்கமளித்துள்ளது.

News April 1, 2026

போர் இன்னும் முடியவில்லை: நெதன்யாகு

image

ஈரானுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக <<19487197>>டிரம்ப் <<>>அறிவித்தார். இதனால் விரைவில் போர் முழுவதுமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்னும் போர் முடியவில்லை என்று இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என்று முழக்கமிட்ட ஈரானின் பயங்கரவாத ஆட்சியை, US – இஸ்ரேல் கூட்டுப்படையால் நசுக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!