News November 9, 2025
ஹெல்மெட் அணியாததற்கு ₹21 லட்சம் அபராதம்… VIRAL!

உ.பி., முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற அன்மோல் என்பவரை போலீஸ் மடக்கி பிடித்தனர். வண்டி சாவியை உருவிய போலீஸ், அவருக்கு அபராதம் விதித்து சலானை நீட்டியது. அதைப் பார்த்த அன்மோலுக்கு அங்கேயே மயக்கம் வந்துவிட்டது. ஆம், ₹20,74,000 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பயந்துபோன அவர் போலீஸிடம் கேட்க, இது ஜஸ்ட் டெக்னிகல் ஃபால்ட், ₹4,000-ஐ கட்டிவிட்டு நடையை கட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.
Similar News
News November 9, 2025
தங்கம் விலை மேலும் குறைகிறது

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தில் உள்ளதால் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பாமர மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக நகை வியாபாரிகளிடம் கேட்டபோது, அமெரிக்காவின் FOMC 2-வது முறையாக வட்டியை குறைத்ததால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மந்தமான சூழலில் உள்ளது. இதனால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறையும் எனக் கூறியுள்ளனர். ஒருவேளை உயர்ந்தாலும் ₹500 – ₹1,000 வரை தான் இருக்குமாம்.
News November 9, 2025
ஒரு செம்மரத்தை கூட இனி தொட முடியாது: பவன் கல்யாண்

பல ஆண்டுகளாக ஆந்திராவில் செம்மர கடத்தல் நடைபெற்று வருகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏராளமான தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செம்மர கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர DCM பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஒரு செம்மரத்தை கூட இனி யாரும் தொட துணிய மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
News November 9, 2025
விஜய் கட்சியில் இருந்து நீக்கம்.. சர்ச்சை வெடித்தது

தவெகவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணம் பெற்று கொண்டு பொறுப்பு வழங்குவதோடு, 7 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. விஜய் அறிவித்த மகளிர் அணி பொறுப்பாளர்களை, மாவட்ட பொறுப்பாளர்களான கோபி, தனம் ஆகியோர் மாற்றியதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தி.மலை, விழுப்புரம், திருச்சியில் பணம் பெற்றுக் கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.


