News February 24, 2026
ஹெலிகாப்டர் விபத்தில் 15 பேர் பலி

பெருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ விமானம் கிழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. Arequipa பகுதியில் நடந்த இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த முழு தகவல் வெளியாகவில்லை.
Similar News
News February 26, 2026
லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டுமா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இந்த 3 தாவரங்களை நடுவது வீட்டிற்கு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என நம்பப்படுகிறது. *துளசி: வீட்டின் முற்றத்திலோ அல்லது கிழக்கு திசையிலோ துளசி செடியை வைத்திருப்பது சிறந்தது *மணி பிளாண்ட்: வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்திருப்பது நல்லது *நெல்லிக்காய் மரம்: வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். SHARE IT.
News February 26, 2026
தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்றும் (பிப்.26) 1 அவுன்ஸ்(28g) $25(இந்திய மதிப்பில் ₹2,339) அதிகரித்து $5,183-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர வாய்ப்புள்ளது. அதேநேரம், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ், $1.49 உயர்ந்து $88.96 ஆக உள்ளது.
News February 26, 2026
தமிழகத்தில் பரவும் காய்ச்சல்.. எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிப்பால் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் அது அனைவருக்கும் பரவும் என்பதால், வீட்டிலும் முகக்கவசம் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பரவி வருவதால் சளி, இருமல், உடல் சோர்வு, வாந்தி, பேதி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகுவது சிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.


