News January 31, 2026
ஹிட்லர், முசோலினி வரிசையில் ஸ்டாலின்: EPS

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக CM ஸ்டாலினை தமிழக மக்கள் பார்ப்பதாக EPS விமர்சித்துள்ளார். வடமாநில பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், 6 வயது சிறுமி முதல் பாட்டி வரை ரோட்டில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லை. ஆனால், ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், ஸ்டாலின் மகளிர் மாநாடு நடத்துவதாக சாடினார்.
Similar News
News February 18, 2026
பணிய வைக்க கனவு காணும் பாஜக: வேல்முருகன்

CBI, ED போன்ற அரசு எந்திரங்களை பயன்படுத்தி அதிமுகவை பணிய வைக்க பாஜக கனவு காண்பதாக வேல்முருகன் சாடியுள்ளார். NDA-வில் CM வேட்பாளர் விவகாரத்தில் டெல்லி தலைமை EPS-ஐ அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பவர் ஷேர் விவகாரத்தில் திமுக, அதிமுக தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் பவர் ஷேர் வேண்டும் என வேல்முருகன் கூறி வருகிறார்.
News February 18, 2026
வங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழை அலர்ட்!

தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்பதால் மக்கள் அலர்ட்டா இருங்க.
News February 18, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. கணவர் தற்கொலை!

மனைவிக்கு தெரியாமல் சிறப்பு நிதியுதவி ₹5,000-ஐ செலவு செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், நெடுங்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன், மனைவி ராமுவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். எனவே, மனமுடைந்த ஈஸ்வரன் இம்முடிவை எடுத்துள்ளார்.


