News March 11, 2026

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வீசிய ஈரான்

image

ஈரான் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாக CNN தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அம்முனையை மூடிய ஈரான், அதனை தாண்டி சென்ற சில கப்பல்களையும் தாக்கியது. தற்போது இப்பாதையில் கண்ணி வெடிகளை ஈரான் அமைத்து வருவதாக US உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஏற்கெனவே இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் LPG விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த செயலால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.

Similar News

News March 29, 2026

விழுப்புரம்: மார்ச் 31-ல் டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகள் மூடல்

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் மற்றும் இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் கடைகளை மூட வேண்டும்
விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2026

இளைஞர்களுக்கு மாதம் ₹8,000.. விஜய் வாக்குறுதி

image

இளைஞர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், *5 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி; இதில், டிகிரி படித்தவர்களுக்கு மாதந்தோறும் ₹10,000, ITI படித்தவர்களுக்கு ₹8,000 சம்பளம். *நேர்மையான தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் ₹25 லட்சம் பிணையில்லா கடன். *TNPSC, TRB, TNEB-களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள். *தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். <<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

பிரிசில்லா பாண்டியன் போட்டி: வியூகம் கைகொடுக்குமா?

image

அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் பொதுத் தொகுதி என்பதால், தனது மனைவியின் சமூக வாக்கை கருத்தில்கொண்டு ஜான் பாண்டியன் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!